மாவடிவேம்பில் நடைபெற்ற தொழில் முனைவோர் வழிகாட்டல் செயலமர்வு முக்கிய செய்திகள்

மாவடிவேம்பில் நடைபெற்ற தொழில் முனைவோர் வழிகாட்டல் செயலமர்வு

1 min read
💬 0

மாவடிவேம்பில் நடைபெற்ற தொழில் முனைவோர் வழிகாட்டல் செயலமர்வு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘Digital Marketing for Cake Makers’ என்ற தலைப்பிலான தொழில் முனைவோர் வழிகாட்டல் செயலமர்வு 26.05.2026 அன்று மாவடிவேம்பு Prayer Church வளாகத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் 20 பேர் கலந்துகொண்டதுடன், கேக் தயாரிப்புத் துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதனை சுயதொழிலாக முன்னெடுக்க ஆர்வமுள்ளவர்களுக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

செயலமர்வின்போது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர்களை ஈர்த்தல், தயாரிப்புகளுக்கான விளம்பர உள்ளடக்கங்களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஊடாக விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இவ்வழிகாட்டல்களை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்கள் வழங்கினார்.

தற்போதைய சூழலில் இளைஞர், யுவதிகளிடையே பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்து வருவதுடன், சிறுவயது திருமணங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளும் இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. இவ்வாறான சமூகப் பின்னடைவுகள் எதிர்கால சந்ததியினரின் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும் பாதிக்கும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவது முக்கியமானதாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மூன்றாம் நிலை நிலை தொழிற்பயிற்சிகளை வழங்கி, NVQ தரச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, இளைஞர்களை தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் எதிர்காலத்தில் தொழில் வழங்குனர்களாகவும் உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன், தொழிற்பயிற்சிகளுக்கு அப்பால், பின்தங்கிய பிரதேசங்களில் சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு செயலமர்வுகளை முன்னெடுத்து வருவதன் மூலம், அப்பகுதி மக்களின் திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களாக மாற்றுவதற்கான வழிகாட்டல்களையும் கல்லூரி வழங்கி வருகின்றது.

அந்த வகையில், Cake Makers க்கான Digital Marketing தொடர்பில் நடைபெற்ற இச்செயலமர்வும், பின்தங்கிய பிரதேசங்களில் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்து, புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொடர்ச்சியான சமூகப் பங்களிப்பின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்