பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் 4 மணிநேரம் நீர் விநியோகம் தடை

மட்டக்களப்பில் 4 மணிநேரம் நீர் விநியோகம் தடை
மட்டக்களப்பில் 4 மணிநேரம் நீர் விநியோகம் தடை

மட்டக்களப்பில் 4 மணிநேரம் நீர் விநியோகம் தடை

வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தினமும் 4 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தினமும் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமைபோன்று இயங்கி வருவதுடன், அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் சுமார் 28 இலட்சம் கனமீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 65 சதவீதமான நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வறட்சியான வானிலையால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளில் நீர் பற்றாக்குறை காரணமாக நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு