பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை
A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘AI for Future’ இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை 08.09.2026 அன்று புதுக்குடியிருப்பு கிளையில் நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இதன்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை விளக்கங்களும், நவீன AI கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் தொடர்பான நடைமுறை வழிகாட்டல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில் பல்வேறு தொழில் துறைகளிலும் AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதுடன், எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு AI தொடர்பான அறிவும் திறன்களும் முக்கியமானதாக அமையும் என்பது தொடர்பிலும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கல்வி நடவடிக்கைகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தொழில் முனைவுத் துறைகளில் AI எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பயிற்சி அமைந்திருந்தது.

இப்பயிற்சிப் பட்டறையின் மற்றுமொரு சிறப்பம்சமாக, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் உருவாக்கப்பட்டு வரும் ‘Plant Talk’ தொழில்நுட்ப செயற்றிட்டம் மாணவர்களுக்கு செயன்முறை வடிவில் செய்து காண்பிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு AI தொழில்நுட்பத்தை வெறுமனே கோட்பாட்டு ரீதியாக அறிமுகப்படுத்தாமல், விவசாயம் மற்றும் இயற்கையுடன் AI எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட முடியும் என்பதை நேரடியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை Plant Talk demonstration வழங்கியது.

எதிர்காலத்தில் AI மற்றும் தொழில்நுட்பம் பல்வேறு தொழில் துறைகளுடன் மேலும் நெருக்கமாக இணையும் நிலையில், இளம் தலைமுறையினருக்கு ஆரம்பத்திலிருந்தே நவீன தொழில்நுட்ப அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் இவ்வாறான பயிற்சிகளை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு